நண்பர்கள்

Tuesday, July 8, 2008

நானும் சாப்ட்வேர் இஞ்சினீர்

எப்போது கேட்டலும் பிஸி
உண்மையோ பொய்யோ தெரியவில்லை,
இன்றைய தேதி சத்தியமாக தெரியாது..
இன்றைய கிழமை கேட்கவே வேண்டாம்,
ஜீன்ஸ் பேன்ட்ஸ் பாவம்,

கம்பெனிக்குள் மட்டும்
போட வேண்டிய டேகை,
ஊரெல்லாம் காட்டி போடும்
அனைவரின் மத்தியில் நானும் ஒருவன்.

இன்றைய ஹெட் லைன் தெரியாது..
ஆனால் ஹெட் டேக் பத்தி நன்றாக தெரியும்..
அந்த அளவுக்கு நிலைமை..

டெட் லைன் வந்தால் மட்டும்
காலை உணவு காணமல் போகும்..
மதிய உணவு மறந்து போகும்.
இரவு இரண்டு மணி சாதாரணம் ..

கடலை பாதி கணினி பாதி
என்று பொழுதை கடத்துவோரும் உண்டு..
கடமையே கண்ணாக இருப்போரும் உண்டு
ஆனால் கொஞ்சம் கம்மி ..
இது சாப்ட்வேர் இன் எழுதப்படாத தலைஎழுத்து..

பில்ட்கள்,
பக் பிக்ஸ்,
செக் இன்,
டெலிவரி,
கோடு ரிவியு..
இவை எல்லாம் தாரக மந்திரம்,

அப்ரைசல், மாத முதல்
தேதி இவை இரண்டும்
காதில் தேன் பாயும் வார்த்தைகள்..

இவை வந்தால் 100 வாட் பல்பாய் முகம் மலர,
மற்ற நேரங்களில் 40 வாட் பல்பாய்
எனக்கு மட்டுமல்ல
இங்குள்ள அனைவருக்கும்,
நண்பானின் முகம் பார்த்து
பேசி நாளானது..
மெயிலில் மட்டும் தெரிந்தான்..
அதுவும் பிசியாய்.

வாரம் ஒரு சினிமா
நண்பர்களுடன் அரட்டை
வீட்டிலிருந்து அம்மா பேச,
விஜய் டிவி யின் ஒத்துழைப்பால் வீக் எண்டு ஓடிவிடும்..
மீண்டும் அந்த
வாழ்க்கை பந்தயத்தில்
பந்தாக மாறிவிடுகிறேன் முடியாமல்...

ஒன்றா இரண்டா தோல்விகள் ..
எண்ண முடியவில்லை
இந்த வேலை கிடைக்க ..

ஐந்திலக்கத்தில் சம்பளம் வாங்க ,
ஐந்தறிவு ஜீவன் போல்
அலைந்தவர்கள் நாம்
அலையும் வேலையில்லா இளம் பட்டதாரிகள் இவர்கள்.

ஆனால் இது தான்
முயன்றும் மறைக்க
முடியாத உண்மை...

நோயிலிருந்து காப்பாற்ற
தேடுகிறோம் பணம்,
அப்போதே நோயிடம் தஞ்சம் புகிறோம்..
தேடிய அனைத்தும்
இழந்த பிறகு மீண்டும்
ஆரம்பிக்கிடது நம் தேடல் பயணம் ..
என்று முடியும் இந்த தேடல்

உன்னுடன் வாழ வேண்டும்

ஒரு நிமிடமாவது
உன்னுடன் வாழ வேண்டும்
என்னுடைய அந்த வாழ்க்கையை...

நீயும் நானும் வாழ வேண்டியதாய்
என் உள் மனதில்
எத்தனையோ எண்ண ஓட்டங்கள்.

கடல் கரை ஓரம்
உன் கை கோர்த்து,
பாதம் நனைய ,
கால்கள் வலிக்க
பேசிக்கொண்டே நடக்க வேண்டும்.

காரணமில்லாமல் உன்னுடன் சண்டை போட்டு,
உன் கோபத்தை நான் ரசிக்க வேண்டும்,

சிறு வயது உப்பு மூட்டையாய் நீ இருக்க ,
நான் சுமக்க வேண்டும்,

உன் விரல் ஸ்பரிசங்களில்
நான் என்னை இழக்க உன்
ஒற்றை விரல் மோதிரமாய் இருக்க வேண்டும்.

உன்னை கவிதைகளால்
அலங்கரிக்க பட்ட தேரில் வைத்து ,
தினம் தரிசிக்கும் பக்தனாய் வாழ வேண்டும்.

உன் வெட்கத்தை திருடி,
பத்திரமாய் என் மனதில் ஒளித்து வைக்க வேண்டும்..

இப்படி எத்தனையோ முடிகின்ற ஆசைகள் ..
முடியாமல் போனது..

"மறந்து விடு என்னை"...
என்ற உன் ஒற்றை சொல்லால் ...