நண்பர்கள்

Friday, July 13, 2012

சீட்டுக்கட்டு…


வெள்ளையாய் மஞ்சளாய் சிவப்பாய்
நிறமேற்றி விதவிதமாய் படம் கொண்டு
அட்டையில் என்னை வழிபடும்
கட்டை கடவுள்கள் இங்கே பலர்
இன்னும் பல திண்ணையோரம்


பதின்மூன்றாய் எனை அடுக்கி
பல பேர் எனை தடவி சுகம் என்று
நினைத்துகொண்டு ராப்பகலாய் இங்கிவன்
தனக்குமொரு குடும்பம் என்று
இருக்குமென நினைவில்லை நான் பேச வழியுமில்லை


ராஜா நான் ராணியும் நான்
பத்து வரை அடுக்கி பார்த்து
கட்டமொன்று சேரவில்லை எனை
திட்டி தீர்த்து விட்டு செல்ல
மனமுமில்லை விடாமுயற்சி இங்கே மட்டும்


ஜோக்கர் ஒன்று சேரும் வரை
ஜோடிபுறா பறந்து போகும்
சேர்ந்தவுடன் திரும்பி வந்து
முக்கூடணி ஒன்று முடிவு செயும்
இவர் ஜோக்கர் அல்லா வேறு யாரோ


சோளக்கஞ்சி பார்த்து கொஞ்சம்
நாளானது அந்த மண்பானை
கூலிவேலையில் மனமில்லை
பெத்த ஆத்தா பிழைப்பு தேடி
வேலைசெய்ய இவனிங்கே என்ன செய்ய


பெத்த பிள்ளை படித்து வர
பிச்சை உன்னை கேட்கவில்லை
வட்டி வாங்கி அனுப்பிவைக்க
வழியொன்று கண்டு சொல்ல
வாயுமில்லை என்ன செய்ய


பெட்டி சேர்த்த பணமுன்னை
கெஞ்சி கேட்டு கொள்வேன் இனி
உன்னை வேண்டி என்னை தொடும்
இவன் மண்ணை தோண்டும் நாள்
சொல்ல தூது செல்ல மாட்டாயோ

No comments: