நண்பர்கள்

Monday, July 23, 2012

தமிழ் எனக்கு...





தமிழ் எனக்கு

ஜனனித்த மழலையின்
உள்ளங்கால் ஸ்பரிசம்

பொசுக்கும் வெயிலில்
ஜில்லென்று இரு கை தண்ணீர்

கடுக்க நின்று பார்த்து முடிக்கும்
தெய்வ தரிசனம்

தெரியாமல் தொடங்கி தெரிந்து
தின்னும் பல்ப குச்சி

தொட்டு பார்த்து குட்டி போடும்
நடுப்பக்க மயிலிறகு

இறுக்கமாய் பின்னலிட்ட சிறுமி
ரெட்டை ஜடை

ஆறு விரல் குழந்தையின் பளீரென்ற
அசட்டு சிரிப்பு

வளைத்து போடும் புள்ளி கணக்கு
தெரியா சிக்கு கோலம்

ஆள் அரவமற்ற வெற்றிடத்தில்
எதிர்பாரா ஆக்சிஜன்

தமிழ் எனக்கு....

ஒழுகும் சளி துடைக்கும்
மூணாவது தெரு கறுப்பி முகம்

அறியா பருவம் அள்ளி தரும்
புடிபடா குறுகுறு காதல்

அறுபதில் இருபதை தரும் பால்யகால
குட்டி சுவர்  நட்பு

வலி தந்து சிரிக்க செய்யும்
சிசுவின் கால் அசைவு

அவள் அவசரமாய் மூட முயலும்
அழகு மார்பகம்

விரும்பி அணியும் கோடு போட்ட
காட்டன் சட்டை

எழுபது வயதில் திரும்பி வரும்
குழந்தை மனசு

இடப்பக்க மார்பில் விரும்பி வாங்கும்
கொள்ளு பேரன் கால் உதை

காத்திருந்து அவள் சொன்ன
அந்த "நானும் உன்னை காதலிக்கிறேன்"

தமிழ் எனக்கு....
இன்னும் நிறைய...

Sunday, July 22, 2012

பொய்




நெடுவென வளர்ந்த அந்த
ஒற்றை மின் கம்பம்
சொல்லியிருக்கலாம்
அவள் அடிக்கடி சாய்ந்து கொள்ளும்
கான்கிரிட் மரம் நான் தானென
சாய்ந்துகொண்டே சரிந்து போயிருப்பேன்
*
குழாயடி சண்டை பார்க்கும்
அந்த ஒற்றை அடி பம்பு
சொல்லியிருக்கலாம்
அவள் அதிகம் பிடித்தது
என் கைகளைத்தான் என்று
இது கைகள் அல்ல
கண்களென ஒற்றியிருப்பேன்
*
படையாய் பாசானை வளர்த்திருக்கும்
அந்த படிதுரையாவது
சொல்லியிருக்கலாம்
அவள் பூவுடல் படும்
தேன் நீர் என்னுடையது தானென
ஆயுள் முழுதும் தீர்த்தமாய்
தின்று  தீர்த்திருப்பேன்
*
இடுப்பு பெருத்த அந்த பச்சை மரம்
சொல்லியிருக்கலாம்
அவள் கண்ணாமூச்சி விளையாடியது
என் பின்னால்தான் என்று
என் இறுதிப்பெட்டி உன் வயிற்றால்
தான் என்றிருப்பேன்
*
கைவிடா
அரசமரத்தடி காளியம்மனாவது
சொல்லியிருக்கலாம்
அவள் மனமார வேண்டுவது
என்னை தானென்று
காலமெல்லாம் காவல் சிலையாய்
நின்று இருப்பேன்
*
பேரை சொன்னாலே பெரிய
புன்னைகை யொன்றை தரும் நீயாவது
சொல்லியிருக்கலாம்
உன்னை காதலிக்க இருந்தது நான் தானென
என் காதலி நீ என்று
என் கல்லறையில் வெட்ட சொல்லியிருப்பேன்
*
இறந்தபின் என் கல்லறையவா 
காதல் செய்ய போகிறாய்
பொய் சொல்ல
இனியாவது கற்றுக்கொள் 
காதலெனும் உண்மையாவது 
உயிருடன் இருக்கட்டும்

Saturday, July 21, 2012

மின்னீர் அஞ்சலி




யாருமற்ற வீட்டில் 
ஆர்ப்பாட்டமாய் மாநாடு
இனிதே தொடங்கிது
அழைப்புமணியின் வரவேற்புரையுடன்

மின்விசிறி காற்றுபொழிவாற்ற
தொலைகாட்சி சத்தமாய் தலைமையுரை
தலைப்பு நன்றி விளக்க பொதுகூட்டம் மின்சாரத்திற்கு
அணைத்து  வயர்களும் வரிசையாய் வாழ்த்து
நன்றி உரையை மின்விளக்கு முடிக்கும் போது

திடீரென மின்வெட்டு வெடித்து
அனைத்தும் உயிரிழந்தது இன்று
இரண்டு மணி நேரம் மின்சார அஞ்சலி
நாளை மீண்டும் மாநாடு
பக்கத்துக்கு வீட்டில்

பயம்





கோவில் படிகளில் இறங்கும்போது
இரண்டு ரூபாய் நாணயம்
உருண்டோடுகிறது,
சத்தம் கேட்டு
என்னை யாரும் பார்த்ததாய்  தெரியவில்லை
பின்பக்க தலை அடிபட்டு அது
ரத்தம் சொட்ட சுழல்கிறது
அப்பொழுதும் யார் கண்ணிலும் படவில்லை
என்னை பார்த்து பயந்து விட்டதாய்
அதன் முகம் காட்டியது
முகத்தை குழந்தையாய்
வைத்துகொண்டு சமாதானம் சொல்ல
முயலுவேன்
அது பொய்யான நடிப்பு என்பதை எப்படியோ
உணர்ந்து கொண்ட நாணயம்
ரத்தம் சொட்ட மீண்டும் உருளுகிறது
முடிவில் ஒரு குட்டையில் விழுந்து 
காட்டுகிறது அதன் 
வெற்றிசிரிப்பை  
இன்னும் என்னை யாரும் பார்க்கவே இல்லை 
அவர்கள் பார்த்திருக்கலாம்


Thursday, July 19, 2012

ச்சோவென பெய்யும் காதல்




காணவில்லை நம்மை
கண்டு பிடித்து தருவோருக்கு
தக்க சன்மானம் உண்டு
கவலையாய்
என் காதலும்
உன் காதலும்
                                                                        -0-0-

                                        தெரியுமா உனக்கு 
                                        என் காதல் ஒ பிரிவாம்
                                        உன் காதல் எ பிரிவாம்
                                        நான் எப்பொழுது வேண்டுமானாலும்
                                        தரலாமாம்
                                        முத்தம்

                                                                        -0-0-


இரவில் ஒரு இடப்பிரச் சினை 
உன் கண்ணிமை நடுவில்
ஓர் இடம் தருகிறாய்
காதல் குழந்தை சுகபிரசவம்
கண் திறப்பாய் காலை
இருப்பது தெரியாமல்
காதலை வைத்து விட்டு
வெளியில்
விழுந்து  விடுகிறேன்
நான்

                                                                        -0-0-


உன் கண் வழியே 
செல்லும் என் காதல் 
என் உதடு வழியே
வெளியேற துடிக்கும் 
நம்
முத்தமாய்

                                                                        -0-0-

                                                நேரில் நீ சென்று 
                                                கனவில் சீக்கிரம் வா 
                                                சிரிக்க மட்டுமே வைக்கிறாய்
                                                அங்கே என்னை 
                                                சிணுங்கவும் வைப்பாய் 

                                                                        -0-0-
உன் தோழி காதலுக்கு 
நீ மாங்காய் ஊறுகாய் 
என் தோழன் காதலுக்கு 
நான் பழைய சோறு 
நம் காதல் பசி 
கண்ணை கட்டும் 
நாள் தோறும்

                                                                        -0-0-

ஒரு மணி நேரம் 
பிரியவேண்டுமா
சின்ன முள் 
பெரிய முள்ளிடம் 

                                                                        -0-0-

                                                உன்னை தெரியுமென 
                                                யாரேனும் 
                                                என்னிடம் சொன்னால் 
                                                என்னை மறந்து 
                                                நீயாகிவிடுகிறேன்   
                                                நான் 



                                                                        -0-0-
தூண்டில் முள்ளாய்
நீ
துடிக்கும் மீனாய் 
நான் 
தண்ணீரில் விடுவாய் 
என நான் 
எண்ணையில் விட்டாய்
நீ 
அவ்வளவு பிடிக்குமா     
என்னை 


                                                                        -0-0-


திரைஅரங்கில்
திட்டு 
முன்னே இருப்பவனுக்கு
மனைவி அருகில்
திட்டு 
பின்னால் இருப்பவனிடமிருந்து 
காதலி அருகில்

                                                                        -0-0-

Friday, July 13, 2012

சீட்டுக்கட்டு…


வெள்ளையாய் மஞ்சளாய் சிவப்பாய்
நிறமேற்றி விதவிதமாய் படம் கொண்டு
அட்டையில் என்னை வழிபடும்
கட்டை கடவுள்கள் இங்கே பலர்
இன்னும் பல திண்ணையோரம்


பதின்மூன்றாய் எனை அடுக்கி
பல பேர் எனை தடவி சுகம் என்று
நினைத்துகொண்டு ராப்பகலாய் இங்கிவன்
தனக்குமொரு குடும்பம் என்று
இருக்குமென நினைவில்லை நான் பேச வழியுமில்லை


ராஜா நான் ராணியும் நான்
பத்து வரை அடுக்கி பார்த்து
கட்டமொன்று சேரவில்லை எனை
திட்டி தீர்த்து விட்டு செல்ல
மனமுமில்லை விடாமுயற்சி இங்கே மட்டும்


ஜோக்கர் ஒன்று சேரும் வரை
ஜோடிபுறா பறந்து போகும்
சேர்ந்தவுடன் திரும்பி வந்து
முக்கூடணி ஒன்று முடிவு செயும்
இவர் ஜோக்கர் அல்லா வேறு யாரோ


சோளக்கஞ்சி பார்த்து கொஞ்சம்
நாளானது அந்த மண்பானை
கூலிவேலையில் மனமில்லை
பெத்த ஆத்தா பிழைப்பு தேடி
வேலைசெய்ய இவனிங்கே என்ன செய்ய


பெத்த பிள்ளை படித்து வர
பிச்சை உன்னை கேட்கவில்லை
வட்டி வாங்கி அனுப்பிவைக்க
வழியொன்று கண்டு சொல்ல
வாயுமில்லை என்ன செய்ய


பெட்டி சேர்த்த பணமுன்னை
கெஞ்சி கேட்டு கொள்வேன் இனி
உன்னை வேண்டி என்னை தொடும்
இவன் மண்ணை தோண்டும் நாள்
சொல்ல தூது செல்ல மாட்டாயோ

Thursday, July 12, 2012

மண்ணில் விழா மழை...


வேலை தேடி
வரிசையில் நிக்கும் போது
மிகவும் வலித்தது
மனசு
வேலை விற்றாகிவிட்டதாம்
காசுக்கு

******

நடு நிசி நாயை
கல்லெறிந்தும் விரட்டுவாள்
வீட்டிற்கு காவல் வைக்கவும்
விரும்புவாள் தாய்
எனக்காக

******

நடந்து செல்கையில்
கூடவந்து ஒட்டி கொண்டது
அலுவலில் இருந்த என்
அழையா நினைவுகள்

*****

குடையாய் உன் சீலை
உனக்கு என்பேன்
வெயில் ஒன்னும் செய்யாது
கால் வெடிப்புகளை
மறைத்த படி
மகளாய் வேண்டும் என் தாய்

*****

குளிர் அறையில்
தாங்கமுடியவில்லை
என் நண்பனின்
துயர செய்தி

*****

எப்பொழுது
கூட்டி செல்வாய் என்
அனிதா செல்லம் கேட்பாள்
எங்கே என
சொல்லாமலேயே

******

Tuesday, July 10, 2012

காதல் சொல் வழி..


நான் பேசி
நீ போடும்
சண்டையை பார்த்து
நம் கடைபிள்ளை புரியாமல் அழ
நடுபிள்ளை உனை இழுக்க..
தலை பிள்ளை எனை இழுக்க..
நடக்க வேண்டும் இது
என் கனவு ஆசை


காலைக்கனவு
பலிக்க வேண்டுமாம்
ஆசையை சொன்னால்
காதல் பதிலாம்
கொடுப்பாய் தானே
இதுவும் என் ஆசையே

சிக்னல் சீர்…


சிவப்பாய் வீங்க
என் அண்ணன் தர
மஞ்சளாய் தாலி
என் கழுத்தில் ஏற

பச்சை கொடி
நானும் காட்ட
இனிதே பறக்கும் நம்
பல்சர் திருமணம்

உன் வெள்ளை தந்தை
விஜயம் செய்வார்
வசூல் ராஜா
அடுத்த சிக்னலில்..

Monday, July 9, 2012

பிச்சைகார(ன்) பசி…


சிக்னலில் இளைப்பாறும் சீர்மிகு
வண்டிகள் மத்தியில்
வாளி வாளியாய்
பசியை மட்டுமே உணவாய்
உண்ட பிச்சையின் புலம்பல்

நேற்று மடுகரையில்
மாநாடு சூப்பர் பிரியாணி
கேட்காமலேயே
ஆடை இழந்தது பொட்டலம்
அரை நிர்வாணமாய் இன்று
குப்பை தொட்டியில்

தெரு நாய்கள்
பலத்தை காட்டி போட்ட
போட்டியில் தோற்றது இலை – நேற்று
வாசமாய் இருந்தது இன்று
நாற்றமாய் மூக்கில்லாதவர்களுக்கும்

இன்று எந்த கட்சி
இடத்தை அடைத்து
கொடி கட்டி சப்தம் நிறைத்து
வசை பாடி
கறிக்கஞ்சி ஊற்றும்
இப்போதே என் வயிற்றுக்கு ஆசை

வட்டிக்கு வங்கியோ வயிறோ
வேண்டாம் என்றா சொல்லும்
எட்டே முக்காலுக்கெல்லாம்
எட்டி உதைத்து எழுப்பியல்லவா
நிக்க சொல்லும்

சீக்கிரம் உனக்கான
திட்டுகளை வாங்கிகொள்
என் அன்பு எதிர் கட்சிகளே
என் இரைப்பைக்கு தெரியுமா
உன் எதிர்கால சிந்தனை

கால் கடுக்க நின்னு பார்த்து
கண்ணாடி கதவை தட்டி பார்த்து
கண்ணில் கொஞ்சம் பசியை காட்டி
கையை கொஞ்சம் இறக்கி காட்டி

காசு கேட்டும் பயனில்லை
போட ஒரு மனுஷன் இல்லை
என்னை போல இன்னும் பலர்
தட்டில்லா பிச்சை இவர்

ஒட்டும் வயிறு கொட்டும் பசி
தட்டி கொடுத்தேன் தடவி கொடுத்தேன்
சமாதானம் வேண்டாம்
சாப்பாடு வேண்டும்

நாளை காலை பசிக்கும் எனக்கு
நாலு தெருவும் போக வேணும்
தட்டு பிடிக்க சத்து வேணும்
முடிஞ்சா போடு தர்மம் நீயும்

வாய் நிறைய திட்டி தீர்த்து
கால் நிறைய உதையும் தந்து
பைசா போட வக்கில்லா
ஆட்டோகாரன் எழுதி வைப்பான்

“கவி  பாடுதைவிட
காசு போடுவது உத்தமம்”

Thursday, July 5, 2012

மீள் சட்டையும் கறுப்பு மின்னலும்..


அரை கை சட்டை தைக்கும் போது தான்

அது நடந்திருக்க வேண்டும்

அவனுக்கு அந்த ஞாபகம் வந்தது

சட்டை துணி வெகுண்டெழுந்து நீள்கிறது


இரு கைகளால் தடுத்து பார்த்தான் முடியவில்லை

மீறி செல்கிறது நீருடைப்பை போல

முடிவில் வெகு தொலைவில் ஒரு

காய்ந்த மரத்தின் இலையின்

கைகள் பட்டு நீள்வது முடிந்து போகிறது


மூச்சிரைக்க ஓடி வந்து நின்று

முழுவதும் நிறைத்திருந்த கருப்பு காற்றை

வேகமாய் விலக்க அங்கே

காய்ந்த இலை இல்லை கருப்பு நிற மரமில்லை



கை நீளும் துணியில்லை

நிற்பது தரையுமில்லை

கருப்பு நிற இடி ஒன்றை

வெண்மேகம் வீசி விட்டு செல்லும்

திடுக்கிட்டு விழித்தெழுந்தான் பின்னிரவில்

தண்ணீர் சொம்பு தறிகெட்டு சிரிக்கும்

நடப்பதெல்லாம் தினமும் சகஜம்……



Communities Tagged : Poetry-Stories


Monday, July 2, 2012

காதலியியல் முதலாமாண்டு…

முதல்  முத்தத்தில்

ஒன்றாவது முடித்தேன்…  என்றேன் நான்

இரு முத்தத்தில்

ரெண்டாவது முடித்தேன்…… என்றாய் நீ

இருபது முத்தத்தில்

இளநிலை …..முடித்தேன் என்றேன் நான்

முப்பது முத்தத்தில் 

முதுகலையும் …… முடித்தேன் என்றாய் நீ

காதல் பொறியியல்

படிக்க 100 முத்தம்

ஆகுமேன்றேன்

காதல் மருத்துவம்

படிக்க 1000  முத்தம்

ஆகுமென்றாய்

அவ்வளவு கொடுக்க என்னிடம் இல்லையென்றேன் ..

காதலியியல் படிக்க நீ மட்டும்

போதுமடா என்று செல்லமாய் கொட்டினாய்

புரியாமல் நானும்

புரிந்ததாய் என் முத்தமும் ….