நண்பர்கள்

Tuesday, June 26, 2012

மகி கண்ணே…



கை பொம்மையை கதைகள் பேசி தூங்க வைத்து

இறகின் மென்மையாய் பூம்பாதம் வைத்து

பிஞ்சு விரல்களால் ஓவியம் தரித்தது

போதுமென்று ஓய்வெடுக்க சென்றாயோ…



சின்னஞ்சிறு மழலை பேச்சில்

பெற்ற தாயின் சோகம் போக்கும் - பிறி தொருநாளில்

உனை எட்டி பிடிக்க முயன்று முடியாமல் – இன்று

கட்டி பிடிக்க கொடுத்து வைக்கவில்லை, காரணம்

நான் என்று சொல்லாமல் சென்றாயோ….



கதவிடுக்கில் உன்னை கண்டு பிடிக்க

கண் பொத்தி காணமல் போய், கணம் சென்று

கண்டவுடன் கை நிறைய தந்தாயே உன் மழலை நகையை

சிந்தி விட்டேன் என்று என்னை சிதறவிட்டு சென்றாயோ…



இடுப்பு வலிக்கிறேந்தேன்று இறக்கி வைக்க

நினைத்தேன் உனை, உடனே பிரிவாய் என முன்பே

தெரிந்தால் காலமெல்லாம் சுமந்திருக்க

மாட்டேனோ என் முத்தச் சந்தமே. என்மேல்

கோபப்பட்டு என்னுயிரை உன்னுடன் கொண்டு சென்றாயோ….



பூ வாடி விழ இப்பூமி எமன் காரணாமாய் இருந்தால்

இறைவன் இறந்துவிட்டான் என்று ஏளனமாய்

கரைந்து சொல்ல எனக்கொன்றும் தடையுமில்லை

இன்னுமொரு பூவாய் பிறந்திருப்பாய் அதை மறுப்பதற்குமில்லை



காவு வாங்கிய பூமி இன்று உன் கால் பதிக்க ஏங்குமடி

உன் கதறல் கேட்டவுடன் மண்ணிற்கும் மரணம் வந்திருக்கும்

எங்கனம் அழுதிருப்பாய் முடியவில்லை நினைத்தாலே

சிறு கீறல் பட்டாலே உன் உயிர் போகுமடி – எப்படி

பெரும் காயம் உன் பூ உடம்பில் ச்பரிசித்தததோ என் கண்ணே …



யார் சொல் கேட்டு என் பசி மறப்பேன் இனி

யார் முகம் கண்டு எனை நான் மறப்பேன் இனி

யார் விரல் பிடித்து ஒரு கணம் நடப்பேன் இனி

உன்னுடன் வரும் வரம் வேண்டும் நான் வாழ

என்னையும் கொண்டு செல்ல மாட்டாயோ என்னுயிரே



மழலை மகி க்கு இந்த பதிவு சமர்ப்பணம்

1 comment:

பிரவின் said...

Highly powerful words da!! :-(