நண்பர்கள்

Wednesday, June 27, 2012

ரிசல்ட்...



பளீரென்று


ஒன்று கிடைத்தது ..

முதுகில்



தெரிந்து உடைத்த

கண்ணாடியை

தெரியாதவாறு தானே

வைத்தோம்



காய்ந்து போன

சிகிரெட் துண்டு

பற்ற வைத்ததை

பார்த்து விட்டாரோ



உச்சி வெயில்

மண்டை காய

அரச மரம்

ஏறியர்தர்க்கா



குச்சி ஐஸ் வாங்க

நல்ல குடத்தை

கொடுத்தர்க்கா



இலந்தை மிட்டாய்க்காக

விரலை முறித்த

எதிர் வீட்டு முருகனின்

வேலையோ



பொக்கைவாய்

பாட்டி கேட்ட

கொட்ட பாக்கு

வாங்காமல் கம்பி நீட்டி

கல்கோனா வாங்க

கடைதெரு சென்றதலோ



ஒன்றும்

விளங்க வில்லை

ஒய்யாரமாய்

வீடு வரும் வரை..



நேற்று முழு ஆண்டு தேர்வு

ரிசல்ட்





கண்ணாடி வளையல்…





கண்ணாடி வளையல்கள்


அவளுக்கு மிகவும் இஷ்டம்

கால் கடுக்க சென்று சந்தையில்

வாங்கும் போது தெரியவில்லை எனக்கு

நாளையே அவை நொறுக்கப்படும் என்று..

பேருந்து பயணத்தில் நிகழ்ந்தது என் மரணம்..


வெட்கப்புன்னகை..





உன்னை விட


உன் வெட்கங்களை தான் அதிகமாக

காதலிக்கிறேன்

எங்கே வைத்திருந்தாய் இவைகளை

எனக்கு தெரியாமல் !!!

காதல் ஸ்பெஷல் ..




1) ஓரப்பார்வை




அந்தி சாயும்

மஞ்சள் வெயில் பொழுதில்,

உன் தோழிகளை போக சொல்லிவிட்டு

எனக்கு மட்டும் தெரியும்படி

ஓரமாய் நீ காட்டும்

அந்த ஒற்றை பார்வைக்காக

எழுதி வைக்கலாம் இந்த

ஈரேழு உலகத்தையும்



2) எப்படி எழுத



திடீரென்று என்னை பார்த்து

சிணுங்கலாய் கேட்டாய்

கவிதை எழுதுவது எப்படி என்று..

நான் சொன்னேன்

நீ கேட்கும் அழகே

தனி கவிதையென்று….

வெட்கத்தில் சிவந்தது

நம் காதல்



கவிதைச்சரம்..


பூமியை
நிலவு சுற்றுகிறதாம்
அதெப்படி ?
நான் அல்லவா
இந்த நிலவை சுற்றுகிறேன்
தினமும் பூமியாய்…

**

தயவு செய்து
பேசும் போது என்னை
தட்டி விட்டு பேசு..
உன்னை பார்த்ததும்
ஆகி விடுகிறேன் சிலையாக …..

**

காற்றுக்கும் எனக்கும் சண்டை …
தொலைபேசியில் நீ தரும்
முத்தத்தை அது வைத்து கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமல்லவா
தருகிறது எனக்கு

**

வெள்ளை நிறத்தில்
உடை அணிவார்களாம் தேவதைகள்
உடன்பாடில்லை எனக்கு
மஞ்சள் நிற தாவணியில் நீ

**

சிற்பிகள் உளியால் வடிக்க
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது
உதடுகளால் வடிக்க
சிலையாய் நான்

Tuesday, June 26, 2012

மகி கண்ணே…



கை பொம்மையை கதைகள் பேசி தூங்க வைத்து

இறகின் மென்மையாய் பூம்பாதம் வைத்து

பிஞ்சு விரல்களால் ஓவியம் தரித்தது

போதுமென்று ஓய்வெடுக்க சென்றாயோ…



சின்னஞ்சிறு மழலை பேச்சில்

பெற்ற தாயின் சோகம் போக்கும் - பிறி தொருநாளில்

உனை எட்டி பிடிக்க முயன்று முடியாமல் – இன்று

கட்டி பிடிக்க கொடுத்து வைக்கவில்லை, காரணம்

நான் என்று சொல்லாமல் சென்றாயோ….



கதவிடுக்கில் உன்னை கண்டு பிடிக்க

கண் பொத்தி காணமல் போய், கணம் சென்று

கண்டவுடன் கை நிறைய தந்தாயே உன் மழலை நகையை

சிந்தி விட்டேன் என்று என்னை சிதறவிட்டு சென்றாயோ…



இடுப்பு வலிக்கிறேந்தேன்று இறக்கி வைக்க

நினைத்தேன் உனை, உடனே பிரிவாய் என முன்பே

தெரிந்தால் காலமெல்லாம் சுமந்திருக்க

மாட்டேனோ என் முத்தச் சந்தமே. என்மேல்

கோபப்பட்டு என்னுயிரை உன்னுடன் கொண்டு சென்றாயோ….



பூ வாடி விழ இப்பூமி எமன் காரணாமாய் இருந்தால்

இறைவன் இறந்துவிட்டான் என்று ஏளனமாய்

கரைந்து சொல்ல எனக்கொன்றும் தடையுமில்லை

இன்னுமொரு பூவாய் பிறந்திருப்பாய் அதை மறுப்பதற்குமில்லை



காவு வாங்கிய பூமி இன்று உன் கால் பதிக்க ஏங்குமடி

உன் கதறல் கேட்டவுடன் மண்ணிற்கும் மரணம் வந்திருக்கும்

எங்கனம் அழுதிருப்பாய் முடியவில்லை நினைத்தாலே

சிறு கீறல் பட்டாலே உன் உயிர் போகுமடி – எப்படி

பெரும் காயம் உன் பூ உடம்பில் ச்பரிசித்தததோ என் கண்ணே …



யார் சொல் கேட்டு என் பசி மறப்பேன் இனி

யார் முகம் கண்டு எனை நான் மறப்பேன் இனி

யார் விரல் பிடித்து ஒரு கணம் நடப்பேன் இனி

உன்னுடன் வரும் வரம் வேண்டும் நான் வாழ

என்னையும் கொண்டு செல்ல மாட்டாயோ என்னுயிரே



மழலை மகி க்கு இந்த பதிவு சமர்ப்பணம்

Monday, June 25, 2012

ஏளன சிரிப்பு....




இந்தியாவை கொள்ளையடிக்க
வெளிநாட்டிற்கு விற்கப்பட்ட இந்தியர்கள்
நம் கணினியாளர்கள்

முழுவதும் கொள்ளை போன பின்
கொடுப்பார்கள் பார் உயர வைத்தவர்கள்
எனும் பட்டம்..

இதயம் உள்ள இந்தியா சிரிக்கும்
பின்னாளில் ஏளனமாக..

Thursday, June 21, 2012

வெறும் கல்லாய் போன என் காதல்..



கணக்குபிள்ளை வயலில் கொடுக்கா புள்ளி பறிக்க
நீ ஏறி உன் காலில் முள் குத்த
வலி தெரியாமல் இருப்பதாய் காட்ட
வெளியே சிரித்தாய் நீ
உள்ளே அழுதேன் நான்

வெறும் காலால் நடந்தேன் அன்று முதல்
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை,
அந்த முள்ளுக்கு தெரியும் என் காதல்…..


யாரிடமோ நீ பிடிக்குமென சொன்ன
அந்த இளஞ்சிவப்பு நிறத்தில்
சட்டை அணிந்து கொண்டு அரச மரத்தடியில்
தினமும் உன்னை எதிபார்த்து உனக்காக நின்றேன்


நீ என்னை பார்க்க மாட்டாய் என தெரிந்தே…
சின்னதாய் ஒரு ஆசை .. “நல்லாயிருக்கு” ஒரு நாளேனும் சொல்வாயென..
உன் மனதிற்கு தெரிய வாய்ப்பில்லை,
அந்த மரத்திற்கு தெரியும் என் காதல்….


நாட்டாமை தோட்ட தென்னந்தோப்பில்
அடி மட்டபாறையில் கல்லால் எழுதினால்
அப்படியே நடக்கும் என்று
செல்லாயி கிழவி சொல்ல

நடு நிசியில் பயந்து கொண்டே சென்றேன் நான்
உன் நினைவுகள் மட்டும் என் வழித்துணைக்கு..
எழுதியது தெரிய வாய்ப்பில்லை,
எழுத்துக்கு தெரியும் என் காதல் …


கால் கிணறு தண்ணீரை கடு மண் சுமக்க
மீதிப்பட்ட வெற்றிடம் என் நினைவுகளால் நிரம்ப
கல் எறிந்து கலைத்தேன்
என் காதலை மறுத்த உன்னை எண்ணி…

எல்லாவும் என்னை பார்த்து சிரிப்பதாய் எனக்கு தோன்றினாலும்,
எனக்கு வரவில்லை அழுகையை தவிர…
தண்ணீரின் உள்ளே வெறும் கல்லாய் என் காதல்