நண்பர்கள்

Thursday, June 21, 2012

வெறும் கல்லாய் போன என் காதல்..



கணக்குபிள்ளை வயலில் கொடுக்கா புள்ளி பறிக்க
நீ ஏறி உன் காலில் முள் குத்த
வலி தெரியாமல் இருப்பதாய் காட்ட
வெளியே சிரித்தாய் நீ
உள்ளே அழுதேன் நான்

வெறும் காலால் நடந்தேன் அன்று முதல்
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை,
அந்த முள்ளுக்கு தெரியும் என் காதல்…..


யாரிடமோ நீ பிடிக்குமென சொன்ன
அந்த இளஞ்சிவப்பு நிறத்தில்
சட்டை அணிந்து கொண்டு அரச மரத்தடியில்
தினமும் உன்னை எதிபார்த்து உனக்காக நின்றேன்


நீ என்னை பார்க்க மாட்டாய் என தெரிந்தே…
சின்னதாய் ஒரு ஆசை .. “நல்லாயிருக்கு” ஒரு நாளேனும் சொல்வாயென..
உன் மனதிற்கு தெரிய வாய்ப்பில்லை,
அந்த மரத்திற்கு தெரியும் என் காதல்….


நாட்டாமை தோட்ட தென்னந்தோப்பில்
அடி மட்டபாறையில் கல்லால் எழுதினால்
அப்படியே நடக்கும் என்று
செல்லாயி கிழவி சொல்ல

நடு நிசியில் பயந்து கொண்டே சென்றேன் நான்
உன் நினைவுகள் மட்டும் என் வழித்துணைக்கு..
எழுதியது தெரிய வாய்ப்பில்லை,
எழுத்துக்கு தெரியும் என் காதல் …


கால் கிணறு தண்ணீரை கடு மண் சுமக்க
மீதிப்பட்ட வெற்றிடம் என் நினைவுகளால் நிரம்ப
கல் எறிந்து கலைத்தேன்
என் காதலை மறுத்த உன்னை எண்ணி…

எல்லாவும் என்னை பார்த்து சிரிப்பதாய் எனக்கு தோன்றினாலும்,
எனக்கு வரவில்லை அழுகையை தவிர…
தண்ணீரின் உள்ளே வெறும் கல்லாய் என் காதல்



No comments: